Breaking News

நியூசிலாந்தில் வலுத்த எதிர்ப்பு; நாட்டை விட்டு வெளியேறினார் போஸி பார்க்கர் - போகும் போது என்ன கூறியிருக்கிறார் பாருங்கள்...!!!

நியூசிலாந்தில் வலுத்த எதிர்ப்பு; நாட்டை விட்டு வெளியேறினார் போஸி பார்க்கர் - போகும் போது என்ன கூறியிருக்கிறார் பாருங்கள்...!!!

நியூசிலாந்தில் எழுந்த பலத்த எதிர்ப்பு காரணமாக திருநங்கைகளுக்கு எதிரான இங்கிலாந்து பெண் செயற்பாட்டாளர் போஸி பார்க்கர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

குறித்த செயற்பாட்டாளரான போஸி பார்க்கர் என்றும் அழைக்கப்படும் கெல்லி-ஜே கீன்-மின்ஷுல், ஆக்லாந்து விமான நிலையத்தின் வழியாக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்படுவதைக் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

ஆக்லாந்தில் உள்ள ஆல்பர்ட் பூங்காவில் நேற்று நடந்த திருநங்கைகளுக்கு எதிரான தனது பேரணியில் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியதை அடுத்து அவர் உரையாற்றாமல் வெளியேறினார்.

மேலும் திருநங்கைகளுக்கு ஆதரவான ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர் மீது தக்காளி சாற்றை வீசினார்கள்.

இதனையடுத்து சர்ச்சைக்குரிய பெண் செயற்பாட்டாளர் கெல்லி-ஜே கீன்-மின்ஷுல் நியூசிலாந்தை விட்டு வெளியேறி உள்ளார்.

மேலும் அவர் போகும் போது
ட்விட்டர் பக்கத்தில், 'அவர் இதுவரை சென்றிராத பெண்களுக்கான மோசமான இடத்தை' விட்டுச் செல்வதாகக் பதிவிட்டுள்ளார்.

அவர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதால், இன்று வெலிங்டனில் அவர் திட்டமிட்ட பேரணி நடக்காது என கூறப்பட்டுள்ளது.