Breaking News

பாஜகவிற்கும் திமுகவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? - ஒப்பிட்டு விமர்சித்த அண்ணாமலை...!!

பாஜகவிற்கும் திமுகவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? - ஒப்பிட்டு விமர்சித்த அண்ணாமலை...!!

இந்தியா: தமிழ்நாடு

தென்காசியில் வெள்ளிக்கிழமை இரவு பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அண்ணாமலை கூறியதாவது:-

பாரதிய ஜனதா கட்சியை மக்கள் மத்தியில் வைக்க வேண்டும். சுத்தமான அரசியலுக்கு வித்திட வேண்டும். சுத்தமான அரசியல் என்பதை மக்களுக்கு புரிய வேண்டும். திமுக பூ விற்கும் அக்காவிற்கு ஓட்டிற்கு 500 கொடுத்தால் காலம் முழுவதும் நீங்கள் பூ விற்க வேண்டும் என்று சொல்கிறார்கள். மோடி அதே பூ விற்கும் அக்காவிற்கு 5 ஆயிரம் கொடுத்தால் நீங்கள் உரிமையாளர் ஆகுங்கள் என்று சொல்கிறார்கள்.

இதுதான் இரண்டிற்கும் வித்தியாசம், திமுகவிற்கும் பாஜகவிற்கும் உள்ள வித்தியாசம் இதுதான். திமுகவை பொறுத்தவரை இளைஞர்கள் போஸ்டர் ஒட்ட வேண்டும். அடுத்த பட்டத்து இளவரசர் ஆட்சிக்கு வர உதவி செய்ய வேண்டும். ஆனால், மோடியை பொறுத்தவரை இளைஞர்கள் தொழில் ஆரம்பிக்க வேண்டும். சொந்தக் காலில் நிற்க வேண்டும் என தெரிவித்தார்.