Breaking News

ஸ்டாலின் கொடுத்த டார்கெட்; விழிபிதுங்கும் திமுக மாவட்டச் செயலாளர்கள்...!!

ஸ்டாலின் கொடுத்த டார்கெட்; விழிபிதுங்கும் திமுக மாவட்டச் செயலாளர்கள்...!!

இந்தியா: தமிழ்நாடு

திமுக மாவட்டச் செயலாளர்கள்
கடந்த 22ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதில் 'உடன்பிறப்புகளாய் இணைவோம்' என்ற மாபெரும் முன்னெடுப்பை ஏப்ரல் 3ஆம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதன்படி ஏப்ரல் 3ஆம் தேதியன்று தொடங்கி, ஜூன் 3, 2023க்குள் அதாவது இரண்டே மாதத்தில் திமுகவில் 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற பெரும் பொறுப்பு மாவட்டச் செயலாளர்களுக்கு கொடுக்கப்பட்டது.

அதன்படி பார்த்தால் சட்டமன்ற தொகுதி ஒன்றுக்கு 40,000 பேர் முதல் 45,000 பேர் வரை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டிய கட்டாயம் திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தினமும் 700 பேர் முதல் 750 பேர் வரை உறுப்பினர்களாக சேர்த்தால் தான் ஸ்டாலின் கொடுத்துள்ள 2 மாத கால கெடுவுக்குள் இந்த மிஷனை கம்ப்ளீட் செய்ய முடியும். இதனால் இந்த விவகாரத்தை மலைப்புடன் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் மாவட்டச் செயலாளர்கள் பலரும்.

இன்றைய காலகட்டத்தில் அரசியல் கட்சியில் இளைஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினரையும் உறுப்பினர்களாக இணைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இருப்பினும் ஸ்டாலினின் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்பதால் இப்போதே புதிய உறுப்பினர்கள் சேர்க்கைகான பணிகளை தொடங்கிவிட்டனர். அமைச்சர்கள் தங்கள் மாவட்டங்களில் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தை இன்றும் நாளையும் நடத்தி இந்த அசைன்மெண்டை எப்படி முடிப்பது என ஆலோசிக்கவுள்ளனர்.

ஏப்ரல் 3ஆம் தேதி தான் 'உடன்பிறப்புகளாய் இணைவோம்' என்ற முன்னெடுப்பு தொடங்கப்பட்டாலும் இப்போதே லோக்கல் நிர்வாகிகள் திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் வேலையை மெல்ல தொடங்கிவிட்டனர்.