Breaking News

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு கொடும் அநீதி - எதிர்க்கட்சிகளுக்கு அறைகூவல் விடுத்த சீமான்...!!!

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு கொடும் அநீதி - எதிர்க்கட்சிகளுக்கு அறைகூவல் விடுத்த சீமான்...!!!

இந்தியா: தமிழ்நாடு

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது மோடி பெயர் குறித்துப் பேசியதாக காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்றும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் சூரத் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. நீதிமன்ற தீர்ப்பையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் நேற்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

அந்தவகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில்‌ 
ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டிருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோதம் என தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினரை, இது போன்ற வழுவற்ற வழக்குகள் புனைந்து தகுதி நீக்கம் செய்வது என்பது குடியரசு அமைப்பை கேள்விக்குள்ளாக்கும் கொடுஞ்செயலாகும்.

இந்திய அரசியலமைப்பின் பிரதான தத்துவமான அதிகாரப்பகிர்தல் (Separation of Powers) என்கிற உயர்ந்த நடைமுறைக்கு எதிரான நடவடிக்கைகள் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் என்றால் மிகையாகாது. அதிகார வர்க்கத்தின் இத்தகைய கொடுங்கோல் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக ஆற்றல்கள் ஒன்று திரண்டு, பாசிச பாஜகவின் முகத்திரையைக் கிழித்தெறிய முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக அறைகூவல் விடுக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.