Breaking News

கைவிடப்பட்ட போஸி பார்க்கரின் ஆக்லாந்து பேரணி - வெலிங்டன் நிகழ்வும் இரத்து..??

கைவிடப்பட்ட போஸி பார்க்கரின் ஆக்லாந்து பேரணி - வெலிங்டன் நிகழ்வும் இரத்து..??

திருநங்கைகளுக்கு எதிரான இங்கிலாந்து பெண் செயற்பாட்டாளர் போஸி பார்க்கரின் பேரணி ஆக்லாந்தில் கைவிடப்பட்டதை அடுத்து, வெலிங்டனில் நாளை நடைபெறவிருந்த அவரது "பெண்கள் பேச அனுமதிக்கும் கூட்டம்" ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Speak Up for Women அமைப்பினால் இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், "வெலிங்டனில் நாளை பெண்களை பேச அனுமதிக்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரத்துசெய்ததை பார்க்கர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை பார்க்கரின் கருத்துக்களை மீண்டும் மீண்டும் கூறியதுடன், இன்று ஆக்லாந்தின் ஆல்பர்ட் பூங்காவில் அவரது பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்களின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளது.

உங்களுக்குப் பிடிக்காதவர்களின் பேச்சை மூழ்கடிப்பது என்பது போட்டிப் பார்வைகளை விவாதிக்க விரும்பாதவர்களின் கோழைத்தனமான அணுகுமுறையாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய நிகழ்வு குறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியையும் அந்த அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்திற்கு வந்து இன்று ஆல்பர்ட் பூங்காவில் தோன்றியதற்கு திருமதி கீன்-மின்ஷுல் அவர்களுக்கு நன்றி என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.