Breaking News

வார இறுதியில் இரத்து செய்யப்படும் ஆக்லாந்து படகு சேவைகள்...!!

வார இறுதியில் இரத்து செய்யப்படும் ஆக்லாந்து படகு சேவைகள்...!!

பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த வார இறுதியில் பல ஆக்லாந்து படகுகளை இரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக Auckland Transport மற்றும் Fullers தெரிவித்துள்ளன.

இரு அமைப்புகளும் Waiheke தீவு, Hobsonville point மற்றும் Devonport ஆகிய இடங்களுக்கு படகு சேவையில் தாமதம் ஏற்படும் என எச்சரித்துள்ளன.

இந்நிலையில் Fullers தலைமை நிர்வாகி மைக் ஹார்ன், இரத்துசெய்தல் ஒரு கடைசி முயற்சி என்றும், அடுத்த வாரம் நிலைமை சரி‌ செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Fullers360, நியூசிலாந்தில் உள்ள அனைத்து போக்குவரத்து மற்றும் சுற்றுலா ஆபரேட்டர்களுடன் இணைந்து, பணியாளர்கள் பற்றாக்குறையுடன் கூடிய கோடை காலத்தில் படகு சேவைகளை இயக்கும் சவாலை எதிர்கொண்டுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, இந்த வழித்தடங்களில் எங்கள் கப்பல்களை இயக்குவதற்கு இந்த வார இறுதியில் பணியாளர்கள் எங்களிடம் இல்லை என அவர் தெரிவித்தார்.