Breaking News

ஆன்லைன் சூதாட்டம்; கனத்த இதயத்துடன் நிற்கிறேன் - சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்...!!

ஆன்லைன் சூதாட்டம்; கனத்த இதயத்துடன் நிற்கிறேன் - சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்...!!

இந்தியா: தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, 'ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை' விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடுஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 8ம் தேதி அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

திருப்பி அனுப்பியதற்கான காரணம் குறித்து ஆளுநர் அளித்துள்ள விளக்கத்தில், 'ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை' என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், இந்த சட்ட முன்வடிவை மீண்டும் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்றைய தினம் சட்டசபை கூட்டம் தொடங்கியதும், 'தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து பேசினார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், கனத்த இதயத்துடன் சட்டசபையில் நிற்பதாக கூறினார். ஆளுநர் தடை சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பல ஆயிரம் பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். எதிராக 25 பேர் மட்டுமே கருத்து கூறியுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை செய்து சட்டம் இயற்ற மாநில அரசுக்கு உரிமை உள்ளது என்று கூறி முதல்வர் ஸ்டாலின், ஆன்லைன் தடை சட்ட மசோதாவிற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் மனசாட்சியை உறங்க வைத்து விட்டு நம்மால் ஆட்சி செய்ய முடியாது என்று கூறிய அவர், என் இதயத்தில் இருந்து இந்த சட்டத்தை இயற்றியிருப்பதாகவும் கூறியுள்ளார்.