Breaking News

நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் - ஓபிஎஸ் பகிரங்க சவால்...!!

நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் - ஓபிஎஸ் பகிரங்க சவால்...!!

இந்தியா: தமிழ்நாடு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கு, சென்னை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ்பாபு அமர்வு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது ஓபிஎஸ் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ஒருங்கிணைப்பாளர் பதவி 2026ஆம் ஆண்டு வரை நீடிக்கிறது. எந்த வாய்ப்பும் அளிக்காமல் விளக்கம் கேட்காமல் காரணம் கூறாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இது தன்னிச்சையமானது. நியாமற்றது.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக, நிதியமைச்சராக பதவி வகித்துள்ளார். பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். பெரும்பான்மை இருப்பதால் எந்த முடிவையும் எடுப்போம் என்ற தொனியில் எடப்பாடி தரப்பு செயல்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் அதிமுகவை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு எதிரானவை. யாரும் போட்டியிட முடியாத வகையில் பொதுச் செயலாளர் பதவிக்கு நிபந்தனை கொண்டு வரப்பட்டுள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்ற விதியை பொதுக்குழு உறுப்பினர்களால் திருத்த முடியாது.

அதிமுகவின் நிபந்தனைகளை நீக்கினால் ஓபிஎஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என வாதிடப்பட்டது.

இதுநாள் வரைக்கு அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று கூறி வந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என்று கூறி எடப்பாடி பழனிச்சாமிக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து ஓபிஎஸ் அளித்த பிரத்யேக பேட்டி கூறியதாவது , "அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார்" அதிமுகவின் புதிய விதிகள் செல்லாது, எம்ஜிஆர் வகுத்த அதிமுக விதிகள் தான் செல்லும் என தெரிவித்துள்ளார்.