Breaking News

ஆக்லாந்து பள்ளியில் நள்ளிரவில் திருட்டு...!!

ஆக்லாந்து பள்ளியில் நள்ளிரவில் திருட்டு...!!

ஆக்லாந்தில் உள்ள பள்ளி ஒன்று இரவோடு இரவாக உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

North Shore இல் உள்ள Beach Haven ஆரம்பப் பள்ளியின் 6 ஆம் ஆண்டு முகாமுக்காக இந்த பணம் திரட்டப்பட்டது என்று பள்ளியின் முகநூல் பக்கத்தில் ஒரு இடுகை கூறுகிறது.

இன்று நள்ளிரவு 12.18 மணிக்கு குறித்த பள்ளியில் எச்சரிக்கை அலாரம் இயக்கப்பட்டதாக காவல்துறைக்கு வந்தது என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஒரு ஆண் பள்ளிக்குள் நுழைந்து ஜன்னலை உடைத்து, பணத்தைத் திருடியுள்ளார்.

பொலிஸார் வருவதற்கு முன்பே அவர் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டார், மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன என அவர் தெரிவித்தார்.

இதனிடையே சிசிடிவி காட்சியில் பதிவாகிய குற்றவாளியின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் 1500 டொலர்கள் பள்ளியில் இருந்து திருடப்பட்டதாக NZ Herald செய்தி வெளியிட்டுள்ளது.