Breaking News

"அது மட்டும் நடக்கலனா தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்வே கிடையாது" - ஹெச்.ராஜா டென்ஷன்...!!

"அது மட்டும் நடக்கலனா தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்வே கிடையாது" - ஹெச்.ராஜா டென்ஷன்...!!

இந்தியா: தமிழ்நாடு

நேற்று தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் முடிவுற்ற நிலையில், பட்ஜெட் தொடர்பாக பாஜக பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தை சில இடங்களில் நடத்தி வருகிறது.

நேற்று தூத்துக்குடி மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியில் நடைபெற்ற மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் ஹெச். ராஜா பங்கேற்று சிறப்புரையாற்றியிருந்தார்.

அப்போது தமிழ்நாடு அரசு மீதும் திமுக மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது...

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆட்சி, கட்சி, குடும்பம் கட்டுப்படவில்லை. திமிரு எடுத்தவர்கள் எல்லாம் திமுகவில் இருக்கின்றனர். இவ்வாறு செயல்படுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் வால்கள் ஒட்ட வெட்டப்படும். மறுபுறம் இக்கட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு பாரமாக இருக்கிறது.

திமுக அரசுக்கு மாற்றாக மத்திய பாஜக அரசு தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த வெற்றிக்கு காரணம், மத்திய அரசின் செயல்பாடுகள் அனைத்திலும் மக்களின் பங்களிப்பு இருக்கிறது.

இதனால்தான் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்ந்த வெற்றிபெற்ற வருகிறது. தேசிய அளவில் தற்போது வரை சுமார் 10 கோடி குடும்பங்களுக்கு நாடு முழுவதும் பிரதமர் காப்பீடு திட்டம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக நரேந்திர மோடிதான் பிரதமராக வரவேண்டும்.

மோடிக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்கவில்லையெனில் உங்களுக்கு உயர்வே கிடையாது. எந்த பிரச்னையாக இருந்தாலும் தீர்வு ஒன்றுபட்ட இந்தியாவில்தான் இருக்கிறது.

காவிரிக்கு நதிநீர் ஆணையம் அமைத்து கொடுத்தது பிரதமர் மோடிதான். எனவே இதுபோன்ற ஆக்கப்பூர்வமான மாற்றங்களுக்கு மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் 30 இடங்களை கைப்பற்ற மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.