Breaking News

Christchurch இல்  வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து - இருவர் காயம்..!!

Christchurch இல்  வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து - இருவர் காயம்..!!

Christchurch புறநகர்ப் பகுதியான Linwood இல் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில் Hereford தெருவில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தீ விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தீ அண்டை வீடுகளுக்கு பரவவில்லை என்றும் தீ பரவல் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என்றும் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் தெரிவித்துள்ளது.

செய்தி நிருபர் - புகழ்