Breaking News

நியூசிலாந்தில் பிரபலமான ஓட்டப்பந்தயத்திற்கு விதிக்கப்பட்ட தடை!

நியூசிலாந்தில் பிரபலமான ஓட்டப்பந்தயத்திற்கு விதிக்கப்பட்ட தடை!

நியூசிலாந்தில் வேட்டை நாய்களை பயன்படுத்தி ஓட்டப்பந்தயம் நடத்துவது தற்போது தடை செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நியூசிலாந்தில் வேட்டை நாய்களை பயன்படுத்தி ஓட்டப்பந்தயம் நடத்துவது நாட்டின் கலாசாரங்களில் ஒன்றாக உள்ளது.

இதற்காக 'கிரே ஹவுண்டு' என்னும் வேட்டை நாய்கள் இன குட்டிகளை சிறுவயதில் இருந்து வளர்த்து அதற்காக தயார்படுத்தி வருவது வழக்கம்.

சமீபத்தில் இந்த வேட்டை நாய்கள் பந்தயதுக்கு தடை விதிக்கக்கோரி விலங்குகள் நல அமைப்புகள் போராட்டம் நடத்தின. போதைப்பொருள் கொடுத்தும், மிக கொடூரமாக துன்புறுத்தப்பட்டும் இந்த பந்தயத்துக்கு அவை தயார்படுத்தப்படுவதாக முறைப்பாடுகள் எழுந்தன. 

இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் வேட்டை நாய் பந்தயத்துக்கு தடை விதிக்கும் வகையிலான புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.

இதனால் இனி வேட்டை நாய்கள் பந்தயத்துக்கு நிரத்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பந்தயம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மிக பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.