Breaking News

வைகாடோவில் உயிரிழந்த 10 மாத குழந்தை முஸ்தபா அலி - சோகத்தில் இஸ்லாமிய சமூகம்..!!

வைகாடோவில் உயிரிழந்த 10 மாத குழந்தை முஸ்தபா அலி - சோகத்தில் இஸ்லாமிய சமூகம்..!!

வைகாடோ நகரமான Te Kūiti இல் இஸ்லாமிய சமூகத்தில் ஒரு ஆண் குழந்தை இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 மாத குழந்தையான முஸ்தபா அலி கடந்த சனிக்கிழமை மதியம் சுயநினைவின்றி வைகாடோ நகர மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வன்முறை சம்பவத்தில் சிறுவன் இறந்துவிட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்,மேலும் பொலிஸார் கொலை விசாரணனையை ஆரம்பித்துள்ளனர்.

முஸ்தபாவும் அவரது பெற்றோரும் வசித்து வந்த Te Kūiti இல் உள்ள வீட்டின் உரிமையாளர் மோஷிப் ஹுசைன் ஆவார்.

குழந்தையின் தந்தை முக்ஸமீல் அலி வருகை தரும் Te Kūiti மசூதி மூலம் தான் அந்த தம்பதியரை முதலில் அறிந்ததாகவும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் முக்ஸமீல் அலியின் மனைவி கர்ப்பமாக இருந்தபோது அந்த இடத்தை அவர்களுக்கு வாடகைக்கு விட்டதாகவும் அவர் கூறினார்.

ஹுசைன் அவர் குடும்பத்தை மூன்று முறை சந்தித்தார் - மிக சமீபத்தில் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு - எல்லாம் நன்றாக இருப்பதாக நினைத்தேன்.

அவர்கள் எனக்கு ஒரு சாதாரண குடும்பம் போலவும், சமூகத்தில் மகிழ்ச்சியான இளம் ஜோடிகளாகவும் இருந்தனர், அவர்கள் நல்ல மகிழ்ச்சியான ஜோடிகளாகத்தான் நான் பொதுவில் பார்த்தேன் என்று அவர் கூறினார்.

உயிரிழந்த குழந்தை "வீட்டின் மகிழ்ச்சி" என்றும், என்ன நடந்தது என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் ஹுசைன் கூறினார். நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன் என்று அவர் கூறினார்.

Te Kūiti மற்றும் Te Awamutu முழுவதும் முஸ்லீம் சமூகத்தில் சுமார் 80 பேர் இருப்பதாகவும், குழந்தை முஸ்தபாவை வைத்திருந்த பலர் துக்கத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் கிரஹாம் பிட்கெத்லி, கடந்த ஆண்டு அக்டோபரில் குறித்த குழந்தை காயமடைந்ததாகவும், அது குறித்து பொலிஸார் ஏற்கனவே விசாரணை நடத்தி வருவதாக கூறினார்.

செய்தி நிருபர் - புகழ்