Coromandel peninsula வில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மூடப்பட்ட மாநில நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
Ruamahunga மற்றும் Tapu இடையே, மாநில நெடுஞ்சாலை 25 இரு திசைகளிலும் தடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்டாப்-கோ நிர்வாகத்தின் கீழ் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் கான்ட்ராக்டர்கள் நாளைய தினமும் தொடர்ந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும், இதனால் சாலை சிறிது நேரத்திற்கு மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி நிருபர் - புகழ்