Breaking News

கிழக்கு ஆக்லாந்தில் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்து - ஒருவர் பலி..!!

கிழக்கு ஆக்லாந்தில் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்து - ஒருவர் பலி..!!

கிழக்கு ஆக்லாந்தில் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 6.35 மணியளவில் Beachlands இல் உள்ள Whitford-Maraetai சாலையில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் இரண்டு பேர் லேசான மற்றும் மிதமான காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இன்னிகையில் விபத்தை தொடர்ந்து மூடப்பட்ட சாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்