வெலிங்டனில் உள்ள பெட்ரோல் பங்கில் கொள்ளையில் ஈடுபட்ட ஆயுதம் ஏந்திய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
Miramar என்ற இடத்தில் உள்ள Z பெட்ரோல் நிலையத்தில் அதிகாலை 3.45 மணியளவில் ஒரு நபர் துப்பாக்கியுடன் நுழைந்து பணம் கேட்டு மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
செய்தி நிருபர் - புகழ்