Breaking News

“அதிமுகவுடன் பாஜக மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை” -  அண்ணாமலை திட்டவட்டம்...!!

“அதிமுகவுடன் பாஜக மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை” -  அண்ணாமலை திட்டவட்டம்...!!

இந்தியா: தமிழ்நாடு

“ஆளுங்கட்சியின் இடர்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தடைகளை தாண்டி மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். எனக்கு வாக்களித்த கோவை மக்கள் அனைவருக்கும் கடமைப்பட்டுள்ளோம்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை வந்த அண்ணாமலை நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 35 இடங்களில் வெற்றி பெற்றிருப்போம் என அதிமுக தரப்பில் கூறப்படுவதைப் பார்த்தால் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே எதோ பிரச்சினை தொடங்கியுள்ளதாக நான் பார்க்கிறேன். 2019-ல் ஆளுங்கட்சியாக இருந்தபோது கூட அதிமுகவால் மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் தான் வெற்றிபெற முடிந்தது.

அதிமுக தலைவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர் என்பதையே 2024 தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. நாங்கள் கோவை மக்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்.

கோவை மக்களின் வாக்கு எங்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. நடிகர் விஜய் உள்ளிட்ட புதியவர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் அவர்களுக்கு ஆதரவு வழங்குகின்றனர். 2026-ல் பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும். அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்பது நான் பேசுவதில் இருந்தே தெரிந்திருக்கும் என்றார் அண்ணாமலை.