Breaking News

வேற்று கிரக வாசிகளை கண்டறியும் முயற்சியில் சுவிட்சர்லாந்து..!!

வேற்று கிரக வாசிகளை கண்டறியும் முயற்சியில் சுவிட்சர்லாந்து..!!

வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ்கிறதா என்பதனை கண்டறியும் முயற்சியை சுவிட்சர்லாந்து ஆய்வாளர்கள் ஆரம்பித்துள்ளனர்.

இதன் முதல் படியாக, வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ்கிறதா என்பதைக் கண்டறியக்கூடிய கருவி யொன்றை சுவிட்சர்லாந்து ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஸ்பெக்ட்ரோகிராஃப் எனப்படும் குறித்த கருவியினை ஜெனீவா மற்றும் Bern பல்கலைக்கழகங்கள் இணைந்து வடிவமைத்துள்ளன.

சுமார் 120 மில்லியன் யூரோக்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள அந்த அபூர்வமான கருவியை சிலி நாட்டில் தற்போது கட்டப்பட்டு வரும் European Southern Observatory என்னும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நிறுவ உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் , இந்த கருவி வெவ்வேறு கிரகங்களின் வளிமண்டல வேதி கூட்டமைப்பைக் கண்டறிந்து, அந்த கிரகங்களில் உயிர்கள் வாழ்கின்றதா என்பதை சுலபமாக அடையாளம் காட்டக்கூடியது என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த திட்டமானது 2032 ஆம் ஆண்டில் முழுமைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.