Christchurch இல் நேற்றையதினம் பிற்பகல் Riccarton சாலையில் கார் மோதுண்டு படுகாயமடைந்த பாதசாரி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தை அடுத்து ஆபத்தான நிலையில் அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே விபத்திற்கான காரணம் குறித்து விசாரணைகள் தொடர்கின்றன.
செய்தி நிருபர் - புகழ்