மெக்சிகோவில் பறவைக் காய்ச்சல் தொற்றினால் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
மெக்சிகோ மருத்துவமனை ஒன்றில் பறவைக் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பறவைக் காய்ச்சல் பரவல் முதலில் மார்ச் மாதத்தில் Michoacan மாகாணத்தில் கோழிகளைப் பாதித்தன.
தொடர்ந்து மெக்ஸிகோவின் ஏனைய மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.