Breaking News

Napier இல் மீட்கப்பட்ட 5.5 கிலோ மெத்தம்பேட்டமைன், துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் - இருவர் கைது...!

Napier இல் மீட்கப்பட்ட 5.5 கிலோ மெத்தம்பேட்டமைன், துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் - இருவர் கைது...!

செவ்வாய்கிழமை இரவு Napier இல் 5.5 கிலோ மெத்தம்பேட்டமைன், துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் பணம் ஆகியவற்றை பொலிஸார்  கண்டுபிடித்ததை அடுத்து, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

19 வயது இளைஞனை கைது செய்வதற்காக மாலை 6.45 மணியளவில் Onewaka என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அதிகாரிகள் AK47 துப்பாக்கியை கண்டுபிடித்தனர், மேலும் ஒரு காலிபர் பிஸ்டல், 5.5 கிலோகிராம் மெத்தம்பேட்டமைன், வெடிமருந்துகள், மற்றும் பணம் ஆகியவற்றை கைப்பற்றினர்.

துப்பறியும் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் ஜேம்ஸ், மீட்கப்பட்ட மெத்தம்பேட்டமைன் தோராயமாக 2.2 மில்லியன் மதிப்புடையதாக இருக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 19 வயது மற்றும் 34 வயதுடைய நபர்கள் இருவரும் கும்பல் உறுப்பினர்கள் எனவும், அவர்கள் இன்று Hastings மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்