சமீபத்திய சர்வதேச தரவரிசையில், ஆக்லாந்து பல்கலைக்கழகம், நியூசிலாந்தின் சிறந்த பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான QS உலக பல்கலைக்கழக தரவரிசை வெளியிடப்பட்டது. அதில் ஆக்லாந்து பல்கலைக்கழகம் 65 ஆவது இடத்தில் உள்ளது. மற்றும் முதல் 100 இடங்களுக்குள் வந்த ஒரே நியூசிலாந்து பல்கலைக்கழகம் இதுவாகும்.
ஆக்லாந்து பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு 68வது இடத்தில் இருந்தது.
ஆக்லாந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டான் ஃப்ரெஷ்வாட்டர், இந்த தரவரிசை அனைத்து ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெருமை சேர்க்கும் சாதனையாகும் என்றார்.
"அடுத்த தலைமுறை தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் மாற்றங்களை உருவாக்குபவர்களை வளர்ப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். வேகமாக மாறிவரும் சமுதாயத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க எங்கள் பட்டதாரிகள் தயாராக இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்," என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
செய்தி நிருபர் - புகழ்