Breaking News

மீண்டும் ரோலக்ஸ்? - லாரன்ஸ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா சூர்யா?

மீண்டும் ரோலக்ஸ்? - லாரன்ஸ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா சூர்யா?

மீண்டும் ரோலக்ஸ்? - லாரன்ஸ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா சூர்யா?இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் கதை எழுதி, தயாரிக்கும் பென்ஸ் படத்தில் நடிக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

இந்நிலையில் அந்தப் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோல் செய்திருந்தார். அதில் சூர்யாவின் எண்ட்ரி படு மாஸாக இருந்தது.

மேலும் அந்த கேரக்டரை வைத்தே ஒரு படத்தையும் இயக்கவிருக்கிறார் சூர்யா. இப்போது வெளியாகியிருக்கும் இந்தத் தகவலால் சூர்யா மீண்டும் ரோலக்ஸாக தோன்றுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.