Breaking News

தேர்தல் முடிவுகளுக்கு பின் முதன்முதலாக கருத்து வெளியிட்ட மோடி...!!

தேர்தல் முடிவுகளுக்கு பின் முதன்முதலாக கருத்து வெளியிட்ட மோடி...!!

இந்தியா

மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்ததற்கு தலைவணங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தனது 'X' தளத்தில் வெளியிட்ட பதிவிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்திய வரலாற்றில் இது ஒரு சாதனை எனவும் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, கடந்த பத்தாண்டுகளில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் நாங்கள் செய்த நல்ல பணிகளைத் தொடர்வோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். மேலும், இந்த வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர்களின் உழைப்பை வார்த்தைகள் ஒருபோதும் நியாயம் செய்யாது எனவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இது தொடர்பாக மோடி தனது கட்சி அலுவலகத்தில் கருத்து தெரிவிக்கையில் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு தேர்தல்கள் ஆணையகத்திற்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

மேலும், வாக்களித்த 100 கோடி வாக்காளர்கள், 11 இலட்சம் வாக்களிக்கும் நிலையங்களில் கடமையாற்றிவர்கள் மற்றும் 50 இலட்சம் தேர்தல் பணியாளர்களையும் பாராட்டியுள்ளார்.

அத்துடன், இந்தியாவின் தேர்தல் முறை வேறெந்த நாட்டிலும் இல்லை எனவும் இதுகுறித்து ஒவ்வொரு இந்தியப் பிரஜையும் பெருமைகொள்ள வேண்டும் எனவும் மோடி தெரிவித்துள்ளார். அதேவேளை, பாஜகவின் ஆட்சியில், காஷ்மீரில் இருந்து சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டமை, கோவிட் காலத்தில் சிறப்பாக செயற்பட்டமை மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பவற்றையும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.