Breaking News

இந்திய தேர்தலில் வெற்றிபெற்ற மோடிக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து..!!

இந்திய தேர்தலில் வெற்றிபெற்ற மோடிக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து..!!

இலங்கை

இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழான சுபீட்சமான முன்னேற்றத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த தேர்தல் வெற்றி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்டை நாடான இலங்கை இந்தியாவுடனான நெருக்கமான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும் இணைந்து செயற்படவும் எதிர்பார்ப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமருக்கு மொரிஷியஸ், நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து செய்திகளை அனுப்பி வைத்துள்ளனர்.