Breaking News

இரத்தத்தில் சிவந்த கடல் - திமிங்கலங்களை வேட்டையாடிக் கொன்ற தீவு மக்கள்..!!

இரத்தத்தில் சிவந்த கடல் - திமிங்கலங்களை வேட்டையாடிக் கொன்ற தீவு மக்கள்..!!

டென்மார்க்கின் ஃபாரோ தீவு மக்கள் பாரம்பரியமாக முன்னெடுக்கப்படும் திமிங்கல வேட்டையால் அப்பகுதி கடல் சிவந்து காணப்பட்டது.

குறைந்தது 138 பைலட் திமிங்கலங்களை ஃபாரோ தீவு மக்கள் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தப்பிச் செல்ல முடியாதபடி திமிங்கலங்களை சிக்கவைத்து, பின்னர் வாளால் வெட்டியும் குத்தியும் கொன்றுள்ளனர்.

1000 ஆண்டு காலமாக ஃபாரோ தீவு மக்கள் திமிங்கல வேட்டையை பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். அந்த மக்களின் மீன் பிடிக்கும் படகுகளை சூழ்ந்து திமிங்கலங்கள் தாக்குவதாலையே ஆண்டுக்கு ஒருமுறை வேட்டையாடுவதாக கூறுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் வேட்டையாடப்பட்ட திமிங்கலங்களை அந்த தீவு மக்களே உணவாக்குகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் திமிங்கல வேட்டை தொடர்பில் தகவல் வெளியாகும்போதும் விலங்குகள் நல அமைப்புகள் கடுமையாக கண்டிப்பதுடன், இது கொடூர நடவடிக்கை என்றும் கூறி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி பகல் 11.30 மணியளவில் ஃபாரோ தீவு மக்கள் திமிங்கல வேட்டையை தொடங்கியுள்ளனர். நண்பகல் 12.45 மணிக்கு சுமார் 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை தப்ப முடியாதபடி சிக்கவைத்துள்ளனர். இருப்பினும், வேட்டையாடுவது பல மணி நேரம் தாமதமாகியுள்ளது.

இறுதியில் மாலை 4 மணிக்கு ஃபாரோ தீவு மீனவர்கள் திமிங்கலங்களை வேட்டையாடியுள்ளனர். தொடக்கத்தில் 40 திமிங்கலங்களை கொன்றுள்ளனர். ஞாயிறு மதியத்திற்கு மேல் மொத்தம் 138 திமிங்கலங்களை கொன்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

பொதுவாக பைலட் திமிங்கலங்களில் ஆண் 60 ஆண்டுகள் வரையும் பெண் 45 ஆண்டுகள் வரையும் உயிருடன் இருக்கும். 2023ல் ஃபாரோ தீவு மக்கள் மொத்தமாக 648 பைலட் திமிங்கலங்களை வேடியாடியுள்ளனர். இந்த சம்பவம் பல நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.