Breaking News

மூக்குத்தி அம்மன் 2 - த்ரிஷாவை அம்மனாக்கும் ஆர்.ஜே. பாலாஜி..!!

மூக்குத்தி அம்மன் 2 - த்ரிஷாவை அம்மனாக்கும் ஆர்.ஜே. பாலாஜி..!!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக நடித்தார் நயன்தாரா. அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். எந்த ஊரில் அம்மன் ஹேர் கலர் எல்லாம் செய்திருக்கிறார் என படம் பார்த்தவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு கண்ட தண்ணீரையும் ஊற்றுவதால் தலைமுடியின் நிறம் மாறிவிட்டதாக ஒரு வசனம் வைத்து கேள்வி எழுப்பியவர்களுக்கு பதில் அளித்தார் ஆர்.ஜே. பாலாஜி. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறாராம்.

இந்த முறை மூக்குத்தி அம்மனாக நயன்தாரா அல்ல மாறாக த்ரிஷாவை நடிக்க வைக்கப் போகிறாராம். பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாகிவிட்டார் த்ரிஷா. முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். அப்படி இருக்கும்போது அவர் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிப்பது ஆச்சரியம் இல்லை.

த்ரிஷாவுக்கு அம்மன் வேடம் பொருத்தமாக இருக்கும். நல்ல முடிவு எடுத்திருக்கிறார் ஆர். ஜே. பாலாஜி என்கிறார்கள் ரசிகர்கள். முன்னதாக மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக நடிக்குமாறு அனுஷ்காவிடம் தான் முதலில் கேட்டிருக்கிறார் பாலாஜி. ஆனால் அனுஷ்கா டைம் கேட்கவே அந்த வாய்ப்பு நயன்தாராவுக்கு சென்றது.

இந்நிலையில் இரண்டாவது பாகத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி. தற்போது த்ரிஷா தன் கெரியரின் உச்சத்தில் இருப்பதால் அவரை பாலாஜி அணுகியிருப்பார் என பேசப்படுகிறது. த்ரிஷாவை மூக்குத்தி அம்மனாக பார்க்க ரசிகர்கள் ஏற்கனவே ரெடியாகிவிட்டார்கள்.