Breaking News

ஹாங்காங்கில் குழந்தைகளுடன் ஜாலியாக இருக்கும் நயன்தாரா.. விக்னேஷ் சிவன் - இன்ஸ்டா பதிவில் விக்கி சொன்ன அந்த விஷயம்..!!

ஹாங்காங்கில் குழந்தைகளுடன் ஜாலியாக இருக்கும் நயன்தாரா.. விக்னேஷ் சிவன் - இன்ஸ்டா பதிவில் விக்கி சொன்ன அந்த விஷயம்..!!

நயன்தாரா விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலகுடன் கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். திரைத்துறையில் பிஸியாக இருந்தாலும், இருவரும் அவ்வப்போது குடும்பத்திற்காகவும் தங்களது பிள்ளைகளுக்காகவும் நேரம் ஒதுக்கி வருகின்றனர்.

அந்த வகையில், நயன் விக்கி தம்பதி தங்களது குழந்தைகளுடன் ஹாங்காங் சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். இதில் நேற்று, நீருக்கடியில் உயிரியல் பூங்காவில் தனது மகன்களான உலக் மற்றும் உயிர் விளையாடும் வீடியோவைப் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது.

தற்போது, விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது குடும்பத்தோடு டிஸ்னிவேர்ல்டில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் உயிர், உலக் மற்றும் நயன்தாரா மூவரும் வெள்ளை நிறத்தில் உடை அணிந்து இருக்கிறார்கள். இந்த போட்டோவிற்கு கேப்ஷனாக, போடா போடி ஷூட்டிங்கிற்கு அனுமதி கேட்டு 12 வருடங்களுக்கு முன் செருப்பு மற்றும் கையில் 1000 ரூபாய் பணத்துடன் இங்கே வந்தேன் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தற்போது, விக்னேஷ் சிவன் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற படத்தை இயக்கி வருகிறார். பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.